உளவியல் ரீதியான உடல்நலப் பிரச்சினை ஊழியர்கள்-JPA இயக்குனர் வான் அகமது தஹ்லான்!
- Muthu Kumar
- 02 Oct, 2024
கூச்சிங், அக் 2:
நாட்டில் 40,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உளவியல் ரீதியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக பொது சேவைகள் துறையான ஜேபிஏவின் இயக்குநர் வான் அகமது தஹ்லான் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.உளவியல் நல்வாழ்வு 2024 (ICOPW2024) பற்றிய சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசுகையில் இதனைக் கூறினார்.
சிவில் சேவையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், அரசு ஊழியர்களிடையே உளவியல் நல்வாழ்வின் நிலை இன்னும் மிதமான மட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார் எனவே, அரசு ஊழியர்களின் திறனை அதிகரிப்பதற்கு மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத்துறையில் வேலையில் மகிழ்ச்சியை வளர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்காரின் நோக்கத்தின் படி வேலையில் மகிழ்ச்சி, பணியாளர்கள் தங்கள் பணியை திறம்படச் செய்யவும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும், என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *