Tvet தொழில் கல்வி புதிய நம்பிக்கையை அளிக்கிறது! - SENATOR K.Saraswathy
- Thina S
- 01 Oct, 2024
தற்போது நாட்டில்
Tvet
தொழில் கல்வியியல் பயிற்சிக் கழகங்கள் மூலம் இளைஞர்கள் பலரும் பயன்பெற்று
வருவது புதிய தலைமுறைக்கான நம்பிக்கையை விதைக்கிறது என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர்
சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
ஷா அலாமில் அமைந்துள்ள Tech Terrain College தொழில் கல்வியாளர்களுக்கான 13 ஆம் ஆண்டுப் பட்டமளிப்பைத் தலைமையேற்ற அவர் இதனை தெரிவித்தார். Tech Terrain கல்லூரியில் பொறியியல், லொஜிஸ்டிக் மற்றும் ரிட்டெயில் மேனெஜ்மன்ட் ஆகிய துறைகளில் பயின்ற மாணவர்களுக்கு 250 தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் சீனாவுடன் தொழில் துறை சார்ந்த முக்கிய அம்சங்களில் கூட்டு சேர்ந்துள்ள Tech Terrain கல்லூரி அனைத்துலக அளவிலும் வேலை வாய்ப்புகள் பெறுவதை Tech Terrain கல்லூரி உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் டிவெட் கல்வியைத் தொடர கல்வி கடனுதவிகளை வழங்கி வரும் பிடிபிகே மற்றும் பிடிபிடிஎன் அமைப்புகளை தாம் பாராட்டுவதாகவும் இதுமாதிரி பயனான வழிகளில் நம் இளம் தலைமுறையினர்கள் ஈடுபடுவது சுபிட்சமான மலேசியாவின் எதிர்காலத்தைக் கண் முன் நிழலாடுவதாக ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி நெகிழ்ந்தார்
சிறந்த கல்வி தேர்ச்சியைப் பெறாத மாணவர்கள் இது போன்ற கல்லூரியில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாகி கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *