பட்ஜெட் 2025 – ஹோட்டல் அறை கட்டணங்களில் கவனம் செலுத்துங்கள்! மலேசிய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். அக் 3:  வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் 2025-ல் குறைந்த அறைக் கட்டணங்கள் மற்றும் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொள்ளுமாறு ஹோட்டல் தொழில்துறை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மலேசிய ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமான MAHOவின்  நிர்வாக இயக்குநர் ஷஹாருடின் முகமட்  சைட், மலேசிய ஹோட்டல் அறைக் கட்டணங்கள் அண்டை நாடுகளை விட கணிசமாகக் குறைவாக இருப்பதாகக் கூறினார்.

 உதாரணமாக, அண்டை நாடுகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஓர் இரவுக்கு  400 முதல் 500 வரைக்கும் அமெரிக்க டாலர்களில் வசூலிக்கும்போது, ​​அதே பிரிவில் உள்ள மலேசிய ஹோட்டல்கள் RM 320-450 வெள்ளி மட்டுமே வசூலிக்கின்றன, இது சமமானதல்ல என்று அவர் எடுத்துரைத்தார்.

மலேசியாவில் போட்டித்தன்மையுடன் இருக்க ஹோட்டல் பிராண்டுகளின் தரங்களையும் நற்பெயரையும் அறை விலைகள் பிரதிபலிக்க வேண்டும் என்று சங்கம் வாதிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2025 நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்த பட்ஜெட் குறிப்பாணையில், வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல் பிராண்டுகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இணையாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அமெரிக்க டாலர்களை வசூலிக்க மலேசிய ஹோட்டல்கள் பரிசீலிக்க வேண்டும் என்று MAHO முன்மொழிந்துள்ளதாக ஷஹாருதீன் கூறினார்.

இருப்பினும், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ரிங்கிட்டில் தற்போதைய அறை கட்டணத்தை தொடர்ந்து அனுபவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை ஹோட்டல்களுக்கு அதிக வருமானம் ஈட்ட உதவும் என்றும், பராமரிப்பு, புதுப்பித்தல் மற்றும் பணியாளர் ஊதியம் ஆகியவற்றிற்கு அதிக ஆதாரங்களை ஒதுக்குவதற்கு உதவும் என்றும் ஷஹாருதீன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *