அரசியல் ஆதாயத்திற்காக நிலை மாறும் முகைதீன்! அக்மால் சலே சாடல்

- Shan Siva
- 05 May, 2025
கோலாலம்பூர், : இன்று பெர்சாத்து தலைவர் முகிதீன் யாசின் 2010 இல் எடுத்த "முதலில் மலாய்க்காரர்கள்" என்ற நிலைப்பாட்டை கைவிட்டதற்காக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே விமர்சித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக தனது நிலைப்பாட்டை முகைதீன் மாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.
2010 இல், அவர் முதலில் மலாய்க்காரர், பின்னர் ஒரு மலேசியர் என்று கூறினார். இப்போது
அவர் அந்த (நிலைப்பாடு) இனி முக்கியமில்லை என்று கூறுகிறார்.
மக்கள் சொல்வது
உண்மை: அதிகாரத்தைத் தேடுவதில் மக்கள் மாறுகிறார்கள் என்று மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மால் கூறினார்.
முகைதீன் போலல்லாமல், தாம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், தனது மலாய் அடையாளம் அடித்தளமானது மற்றும் மாறாதது என்றும்
அக்மால் வலியுறுத்தினார்.
ஒரு மலேசியருக்கு
முன்பு நான் முதலில் மலாய்க்காரனாகவே இருக்கிறேன், ஏனென்றால் அது என் இனம். அது மாற்ற முடியாத ஒன்று. என்று அவர்
கூறினார்.
முன்னதாக நேற்று,
முகிதீன், தான் ஒரு முறை "மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை"
என்று கூறியதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இது "இனி முக்கியமில்லை" என்று
தற்போது குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒரு மலாய் மலேசியராகக் கருதினாலும். தன்னை "மலாய்க்காரர் மட்டுமே" என்று ஒருபோதும் பார்த்ததில்லை என்று முகைதீன் கூறினார்!
Pada tahun 2010, Muhyiddin Yassin menyatakan beliau "Melayu dahulu, kemudian rakyat Malaysia", namun kini menarik balik kenyataan itu. Ketua Pemuda UMNO, Dr. Akmal Saleh mengkritik perubahan itu demi kepentingan politik dan menegaskan identiti Melayu kekal penting baginya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *