லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மனிதக் கடத்தல் கும்பல்கள்!

- Muthu Kumar
- 25 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 25-
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக அந்நியர்களைக் கடத்திவரும் கும்பல்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன. நாட்டுக்குள் தருவிக்கப்படும் ஒவ்வொரு குடியேறியிடமிருந்தும் பதினேழாயிரம் வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று மலேசியக் கடலியல் அமலாக்க முகமை (எம்எம்இ) தெரிவித்துள்ளது.
சில படகுகளில் 300 குடியேறிகள் வரை வருகின்றனர். ஒரு பயணத்திற்கு லட்சக்கணக்கான பணத்தை அவர்களிடமிருந்து அக்கும்பல்கள் வசூலிக்கின்றன. கடந்த ஜனவரி 3ஆம் தேதி லங்காவியின் தெலுக் யூ பீச் பகுதியில் 196 கள்ளக் குடியேறிகள் பிடிபட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கூடுதலாக இரண்டாயிரம் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது. படகு கொள்முதலுக்காகவும் இதர தளவாட ஏற்பாடுகளுக்காகவும் அப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது மொத்தம் பதினெட்டு லட்சம் வெள்ளியை சம்பந்தப்பட்ட மனிதக் கடத்தல் கும்பல் பெற்றுள்ளது என்று அந்த முகமையின் தலைமை இயக்குநர் முகமது ரோஸ்தி அப்துல்லா குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு 147 படகுகள் இடைமறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 566 பேர் இருந்தனர் என்றார் அவர்.
மலேசியாவுக்கு இதுவரை 181,000 பேர் அடைக்கலம் நாடி வந்துள்ளனர். அவர்களுள் 85 விழுக்காட்டினர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்குடியேறிகளில் 103,000 ரோஹிங்யாகாரர்கள். எஞ்சிய நபர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
Kumpulan penyeludupan pendatang di Malaysia meraih keuntungan besar dengan mengenakan bayaran RM17,000 setiap individu. Sejak 2023, 147 bot ditahan dengan 566 pendatang. Sejumlah 181,000 orang mencari suaka di Malaysia, majoritinya dari Myanmar, termasuk 103,000 etnik Rohingya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *