கலைமகளின் உயர்கல்விக்கு உதவிய பொதுமக்களும் கிளாந்தான் பல்கலைக்கழகமும்! - UMK

top-news
FREE WEBSITE AD

கிளாந்தான் பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வியைத் தொடரவிருந்த Kalaimagal Chinnakaruppan எனும் பேராக்கைச் சேர்ந்த இந்திய மாணவிக்குப் பல்கலைக்கழக நுழைவுக் கட்டணமான RM3,000 நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் உதவியைச் சமூகவலைத்தளத்தின் மூலமாக நாடினார். 

இதனை அறிந்த பொதுமக்களும் நிதி ஆதரவளித்த நிலையில் RM 1,000 ரிங்கிட் சேர்க்கப்பட்டது. அவரின் வறுமையை அறிந்த கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் கீழ் இயங்கும் சக்னா யு.எம்.கே திட்டத்தின் வாயிலாக அவருக்கு RM 1,000 ரிங்கிட்டுடன் மடிக்கணிணியும் வழங்கப்பட்டதுடன் அவரின் பல்கலைக்கழக நுழைவுக் கட்டணத்திற்கானத் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மாதம் 700 ரிங்கிட் வருமானத்தில் பணியாளராக இருக்கும் தந்தை சின்னக்கருப்பனின் மகள் தற்போது பல்கலைக்கழக மாணவி என கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து வாழ்த்தினைத் தெரிவித்துள்ளது கிளாந்தான் பல்கலைக்கழகம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *