அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய எஃப்-35 ஜெட் விமானம்- சீனா வெளியிட்ட அறிக்கை!

top-news
FREE WEBSITE AD

இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பின் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பேசியதுமே கடுப்பில் சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ​​இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த இந்திய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்கு அதிகளவு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதாகவும், அமெரிக்கா இந்தியாவுக்கு எஃப்-35 ஜெட் விமானங்களை வழங்கும் என்றும் கூறினார்.
இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்ற நாடுகளைப் பாதிக்கக்கூடாது என்று சீனா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியம் புவிசார் அரசியல் போட்டிக்கான களம் அல்ல, மாறாக அமைதியான வளர்ச்சிக்கான மையம். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு சீனாவுக்கோ அல்லது பிற நாடுகளின் நலன்களுக்கோ தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும், இருதரப்பு உறவுகள் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று சீனா நம்புகிறது என்றும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *