நாடு முழுவதும் 10 ஆயிரம் EV சார்ஜிங் நிலையங்கள்!

top-news
FREE WEBSITE AD

பாங்காக், மே 23: மலேசியா 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவ இலக்கு வைத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சராகவும் இருக்கும் ஃபடில்லா, மலேசியா மின்சார வாகன உற்பத்தி மற்றும் புதுமைக்கான பிராந்திய மையமாக மாற விரும்புவதாகக் கூறினார்.

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் இந்த பிரிவுக்கு சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நாடு தழுவிய சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சபா மற்றும் சரவாக் உட்பட மலேசியா முழுவதும் சுமார் 10,000 சார்ஜிங் நிலையங்களை நிர்மாணிப்பத தங்கள் இலக்கு ​​என்று தாய்லாந்தில் உள்ள மலேசிய புலம்பெயர்ந்தோருடன் இரவு விருந்தில் நேற்று உரையாற்றிய போது  அவர் கூறினார்!

Malaysia mensasarkan pemasangan 10,000 stesen pengecas kenderaan elektrik menjelang akhir 2025. Kerajaan mahu menjadikan negara pusat inovasi EV serta menarik pelabur melalui pembangunan infrastruktur pengecasan di seluruh Sabah, Sarawak dan Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *