நம்மை விட 10,000 மடங்கு வளர்ச்சி பெற்றவர்கள் வேற்று கிரகவாசிகள்!இஸ்ரோ தலைவர்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் இஸ்ரோ (ISRO) தலைவர் சோமநாத் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் இருக்கிறது. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகளும் அதிகம் என்று கூறியுள்ளார்.

மேலும் நமது நிலைமை நூறு ஆண்டுகளுக்கு முன்பு மோசமாக இருந்தது எனவும்  இன்று அந்த நிலை அடியோடு மாறிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோபோன், கேமரா, லைட், தகவல் பரிமாற்ற வசதிகள், தொலைக்காட்சி என எதுவும் இல்லை. இப்போது 100 ஆண்டுகளில் நாம் அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளோம். இதே போன்ற நாகரீகம் வேற்று கிரக வாசிகளுக்கும் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நம்மை விட வேற்றுகிரகவாசிகள் ஆயிரம் ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் இப்போது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. நூறு ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடிந்தது என்றால், அடுத்த 100 ஆண்டுகளில் நாம் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். சுமார் 1000 ஆண்டுகள் நம்மை விட முன் தோன்றி இருப்பவர்கள் வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள்.

அவர்கள் இப்போது எத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பார்கள். நிச்சயம் வேற்று கிரகவாசிகள் இங்கு இருக்க வேண்டும். அவர்கள் நமது பாட்காஸ்ட் -ஐ கேட்டால் கூட ஆச்சரியம் இல்லை என்று தான் கூறுவேன். உங்களை வேற்றுகிரகவாசிகள் புழுவாகவே நடத்துவார்கள். நம்மை விட பத்தாயிரம் மடங்கு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பம் கொண்டவர்கள் வேற்று கிரகவாசிகள். அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள். நிச்சயம் அவர்கள் இங்கு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *