13வயது சிறுவனுக்கு 'ரேபிஸ்' நோய்!

- Muthu Kumar
- 27 May, 2025
கூச்சிங், மே 27-
இம்மாதம் பூனையொன்றினால் கடிக்கப்பட்ட பதின்மூன்று வயதான சிறுவன் ஒருவன் ரேபிஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளான். சரவாக் மாநிலத்தில் இவ்வாண்டு ரேபிஸ் பீடிக்கப்பட்டுள்ள முதல் நபர் இவனாவான்.
கூச்சிங் அருகே கம்போங் செகிடுப் எனும் இடத்தைச் சேர்ந்தவனான அச்சிறுவனிடம் கடந்த 21ஆம் தேதியன்று காய்ச்சல், பசியின்மை, வாந்தி, மயக்கம், பிதற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, சரவாக் பொதுமருத்துவமனைக்கு அவன் கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவனுக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று சரவாக் மாநில உணவுத்தொழில்,மூலப்பொருள் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஸ்டீபன் ருண்டி உத்தோம் தெரிவித்தார்.
ஒரு நோயாளிக்கு இதுபோன்ற அறிகுறிகள் தோன்றத் தொடங்கினால் அவரைக் காப்பாற்றுவது மிகச் சிரமம் என்றும் அவர் கூறினார்.
அச்சிறுவனைக் கடித்த பூனை இறந்து விட்டது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அது தெருவில் திரிந்து கொண்டிருந்த பூனையாகும். அதே நேரத்தில், தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.பூனைகள் அல்லது நாய்களால் கடிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும். இல்லையெனில், அவர்களின் மூளை பகுதியையும் நரம்புகளையும் ரேபிஸ் கிருமிகள் தாக்கக் கூடும் என்று ஸ்டீவன் எச்சரித்தார்.
இவ்வாண்டில் இருபத்தோரு பூனைகளிடம் சோதனை நடத்தப்பட்டதில், அவற்றில் இரண்டு பூனைகளின் உடல்களில் ரேபிஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விலங்குகளால் கடிக்கப்படும் நபர்களுக்கு அக்கிருமிகள் தொற்றும். அக்கிருமிகள் மூளையைத் தாக்கினால் வேறு எதுவும் செய்ய இயலாது.
Seorang budak lelaki 13 tahun dari Kampung Segedup, Kuching dijangkiti rabies selepas digigit kucing jalanan. Beliau menunjukkan simptom pada 21 Mei dan disahkan positif rabies di hospital. Ini kes pertama rabies di Sarawak tahun ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *