டெல்லி இரயில் நிலையத்தில் கூட்டநெரிசல்-15 பேர் பலி!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டத்தில், திரிவேணி சங்கம் மற்றும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உலகளாவிய ஆன்மீக பக்தர்களும் வருகை தந்தனர்.

தற்போது வரை 49 கோடிக்கும் அதிகமான ஆன்மீக பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி இருக்கின்றனர். இதனிடையே, பக்தர்கள் சொந்த ஊர் செல்ல நேற்று புதுடெல்லி இரயில் நிலையத்தில் திரண்டனர்.

இதனால் புதுடெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக 14, 15, 16 நடைமேடைகளில் மக்கள் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது. இதனிடையே, 14 மற்றும் 16 ம் எண் நடைமேடைக்கு வர வேண்டிய இரயில்கள், இறுதிக்கட்டத்தில் நடைமேடை மாற்றி அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக பயணிகள் அங்கும் - இங்குமாக செல்ல முந்திய காரணத்தால் கூட்டநெரிசல் ஏற்படவே, இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல் இரயில் நடைமேடையில் இருப்பதும், மக்களின் செருப்புகளை அவர்கள் விட்டு இரயிலை பிடிக்க முண்டியடித்து கலவரக்காட்சிகள் போல பதிவான நெஞ்சை பதறவைக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *