பா ஜ கட்சியின் கங்கனா ரணாவத்தை தாக்கிய பெண் காவலருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு !
- Muthu Kumar
- 08 Jun, 2024
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமாா் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இதையொட்டி, பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க தில்லி புறப்படுவதற்கு கங்கனா, சண்டீகா் விமான நிலையம் வந்தாா்.
விமானத்தில் ஏறும்முன் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின்போது, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பெண் காவலா் கங்கனாவை கன்னத்தில் அறைந்துள்ளாா். 'மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள்' என்றும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை ரூ.200, ரூ.300-க்கும் சென்று அமர்ந்திருக்கிறார்கள் என்றும் கொச்சையாக தெரிவித்த கருத்துக்காக கங்கனாவை அந்தக் காவலா் தாக்கியதாக கூறப்படுகிறது.
கங்கனாவைத் தாக்கிய பெண் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் காவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தொழிலபதிபர் ஷிவ்ராஜ் சிங் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
அதாவது, தனது தாய் கலந்துகொண்ட விவசாயப் போராட்டத்தை பற்றி கொச்சையாக எவர் பேசியிருந்தாலும் மகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
சிலர் வாக்குகளின் வழியாக தன் எதிர்ப்பை தெரிப்பார்கள். இன்னும் சிலர் அறைந்து தன் எதிர்ப்பை காட்டுவார்கள்.
எனினும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் காவலர் சட்டத்தை கையில் எடுத்திருக்க வேண்டியதில்லை. கங்கானாவுக்கு நேர்ந்த சம்பவம் தவறுதான். எனினும் விவசாயிகளும் மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *