கன்னியாகுமரியில் மோடியின் 45 மணி நேர தியானத்திற்காக 2000 போலீஸ் ! மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !
- Muthu Kumar
- 30 May, 2024
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்ததும் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.
மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இதில் 30ஆம் தேதி மாலையில் இருந்து 1ஆம் தேதி காலை வரை தியானம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு இரவு ஒரு பகல் முழுவதும் தியானம் செய்யவுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள இதுதொடர்பான நிகழ்ச்சி நிரலில், 30ஆம் தேதி பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு தனி விமானத்தில் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்ட்டரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு, அங்கு மாலை 4.35 மணிக்கு சென்றடைகின்றார்.
அதன் பின்னர் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் அங்கு மறுநாள் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார். 31ஆம் தேதி முழுவதும் தியானத்தில் ஈடுபடுவதுடன், ஜூன் மாதம் 1ஆம் தேதி காலை வரை தியானத்தினைத் தொடர்கின்றார். அதன் பின்னர் ஜீன் 1ஆம் தேதி பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *