பிறப்பால் இரட்டையர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களிலும் ஒரே ஒற்றுமைகள்!!
- Muthu Kumar
- 07 May, 2024
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவர் தேர்வு எழுதி, வெற்றி பெற்று இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் ஏழ்மையிலும் நம்பிக்கையுடன் படித்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் சுவாரசிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
அந்த வகையில் வேதாரண்யம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா (விவசாயி) இவரது மனைவி சவிதா இவர்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிர்மல், நிகில் என்ற இரட்டை குழந்தை பிறந்தது.இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் விக்டரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். நேற்று 12ஆம் வகுப்பு போது தேர்வு வெளிவந்த நிலையில் கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இந்த இரட்டையர்கள் இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் மாணவர்களும் அவர்களது உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து . அதற்கு ஒருபடி மேலாக இந்த இரட்டை சகோதரர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்றதால் இந்த இரட்டை சகோதரர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *