எலிகளுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் நாடு!!! தகவல்கள் இங்கே!!
- Muthu Kumar
- 07 May, 2024
பொதுவாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முதல் கட்ட மருந்துகளை எலிகளுக்கு செலுத்தி பரிசோதிப்பார்கள். இப்படி செய்தால்தான் மருந்தின் செயல் திறன கண்டறிய முடியும். அதற்கான காரணம் மனித உயிர்களுக்கு ஏற்றது போல எலிகளின் உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணு காணப்படுகின்றது. இந்த ஆராய்ச்சி மூலமாக பல்லாயிரக்கணக்கான எலிகள் உயிரிழக்கின்றன.
இதற்கு நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் விதமாக ரஷ்ய நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த எலிகளின் சிலைகள் கண்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு கைகளில் ஊசியுடன் DNA வை பின்னுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் கவனம் பெறுகிறது. இந்த சிலையை ரஷ்யாவின் நோவாசிபிரிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *