கைத்தொலைபேசியில் பேசிய படியே அரளிப்பூவை பிடுங்கி சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்

top-news
FREE WEBSITE AD

 லண்டன்  சென்று பணியாற்ற நினைத்த கேரளாவைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்தது..

அந்த சந்தோஷத்தில் செல்போனில் பேசியபடியே தெரியாமல் வீட்டின் வாசலில் இருந்த அரளி செடியின் பூவை சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஹதிப்பாடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடைய,24 வயதுள்ள மகள் சூர்யா சுரேந்திரன் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்த சூர்யாவுக்கு, லண்டனில் செவிலியராக வேலை கிடைத்தது. இதையடுத்து, லண்டன் செல்வதற்காக கடந்த திங்கள்கிழமை கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்குச் உற்சாகத்துடன் சென்றார்

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அடிக்கடி வாந்தி எடுத்தபடி சென்ற சூர்யாவை சோதித்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அவரை அங்கமாலியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் உடல் நிலை மோசம் அடைந்து  சிகிச்சை பலனின்றி செவிலியர் சூர்யா உயிரிழந்தார்.

முன்னதாக செவிலியர் சூர்யா சுரேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து விசாரித்துள்ளனர். அப்போது செவிலியர் சூர்யா உறவினர்களிடம் போனில் பேசியபோது, வீட்டு முற்றத்தில் செல்போனில் பேசியபடி நின்றிருந்த நிலையில், செடிகளை பிய்த்து வாயில் வைத்தேன்.அப்போது தவறுதலாக அரளி செடியின் பூவை வாயில் போட்டு மென்றதாகவும், பின்னர் அதை துப்பிவிட்டேன் . மேலும் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் பலமுறை வாந்தி எடுத்தேன் என்று உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்..

இந்த நிலையில், சூர்யா சுரேந்திரனின் உடல் நிலை மோசம் அடைந்து இறந்ததை பார்த்த மருத்துவர்கள், இதயம் நின்று போனதே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் கூறும் போது, அரளியின் பூ, இலை, காய், வேர் ஆகியவை விஷம் நிறைந்தவை. அதில் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் தன்மை இருக்கிறது.

சூர்யா சுரேந்திரனின் உடல் பாகங்களை ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த சோதனை முடிவுகள் வெளியான பின்னரே செவிலியர் சூர்யாவின் மரணத்துக்கு அரளிப்பூ காரணமா என உறுதியாகத் தெரிவிக்க முடியும்" இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *