ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் -கல்வியாளர் பரிந்துரை!

- Muthu Kumar
- 19 May, 2025
கோலாலம்பூர், மே 19
போதனை மற்றும் கற்றலின் ஆக்கப்பூர்வத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்த, ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்கினால் கடந்த வெள்ளிக்கிழமை கூறப்பட்டதுபோல், கல்வி சீர்திருத்தத்தை ஆதரிக்கும் நோக்கத்தில் இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாக, மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அனுவார் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு வகுப்பறையும் அதிவேக இணையச் சேவை, ஒரு விவேகப் பலகை மற்றும் ஓர் எல்சிடி திரை ஆகியவற்றையும் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.
"வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஒவ்வொரு மாணவர் மீதும் ஆசிரியர்களினால்
போதுமான கவனத்தைச் செலுத்த முடியும்" என்று, ஒரு முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது இருப்பதைக் காட்டிலும், வகுப்பறைகள் சிறந்த அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். வெளிச்சமான விளக்குகள், செயல்படும் மின் விசிறிகள், குளிர்சாதனங்கள் மற்றும் முறையான மேஜைகளும் நாற்காலிகளும் அவற்றில் அடங்கும்" என்று அனுவார் தெரிவித்துள்ளார்.கல்வித் துறையின் அதிகாரமளித்தலானது, சிறிய பிரிவிலிருந்து அதாவது வகுப்பறையிலிருந்து அவசியம் தொடங்க வேண்டும் என்று. கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினத்தை முன்னிட்ட உரையில் ஃபட்லினா குறிப்பிட்டிருந்தார்.
முறையான மாற்றமும் சீர்திருத்தமும் கல்விக் கொள்கைகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்றும்,பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் தொடர்பு போன்ற அடிப்படை அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.வகுப்பறைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் இருக்கும் விவகாரம் இதற்கு முன்னர் எழுப்பப்பட்டது. சில பள்ளிகளில் 50 மாணவர்கள் வரையில் ஒரு வகுப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தைக் களையச் செய்வதற்காக அரசாங்கம், கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்து கடந்த ஆண்டு வரையில் 44 புதியப் பள்ளிகளுக்கான கட்டுமானத்தை அங்கீகரித்திருந்தது.
அதோடு, வகுப்பறைகளில் அதிகளவில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக தற்காலிக கேபின் வகுப்பறைகளின் கட்டுமானத்திற்காக மட்டும் அரசாங்கம் 10 கோடி வெள்ளியையும் அங்கீகரித்திருந்தது.
Kerajaan dicadangkan mengehadkan bilangan pelajar dalam satu kelas kepada 25 orang untuk meningkatkan kualiti pengajaran. Cadangan turut merangkumi kemudahan asas lebih baik seperti internet pantas, LCD, dan perabot selesa bagi suasana pembelajaran efektif.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *