6 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், மே 30-

பண்டார் சாசியாவை நோக்கிச் செல்லும் ஜாவியிலுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 160ஆவது கி.மீட்டரில் கார் ஒன்று 6 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சிக்கிக் கொண்ட பின்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் காயமுற்றனர்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.51 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு மாநிலத் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இவ்விபத்து 6 வாகனங்கள் சம்பந்தப்பட்டதாகும். அவற்றில் 3 வாகனங்கள் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பி விட்டன.இது 7 பேர் அடங்கிய ஒரு விபத்தாகும். இருந்த போதிலும் யாரும் அதில் சிக்கிக் கொள்ளவில்லை, மாறாக 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் 5 வயதுடைய சிறுமிக்கும் சொற்பக் காயங்கள் ஏற்பட்டன.
இவர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் தரப்பினர் கொண்டு சென்றதாக ஓர் அறிக்கையில் ஜோன் சாகுன் பிரான்சிஸ் குறிப்பிட்டார்.


Satu kemalangan membabitkan enam kenderaan berlaku di Kilometer 160 Lebuhraya Utara-Selatan dekat Jawi. Dua beranak cedera ringan dan dihantar ke hospital. Tiga kenderaan telah beredar sebelum bomba tiba. Tiada mangsa tersepit dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *