8 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 டன் போதைப்பொருள் பறிமுதல்! 3 இந்தியர்கள் கைது! புக்கிட் அமான் அதிரடி

top-news

(இரா.கோபி)

காஜாங், ஏப்ரல் 29: காஜாங், சுமார் 8 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 2 டன் போதைப்பொருள்களை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.

மேலும் இந்திய ஆடவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த சேமிப்புக்கிடங்குகளும், பதப்படுத்தும் இடங்களும் கண்டறியப்பட்டது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற அதிரடிச் சோதனையில் இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் வழி அனைத்துலகக அளவில் இயங்கி வந்த முக்கிய கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டி.சி.பி மாட் ஜானி @ முகமது சலாவுடின் சே அலி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட சோதனையில் காஜாங், தாமான் நடாயுவில் உள்ள ஒரு 3 மாடி வீட்டில் 39, 38 மற்றும் 27 வயதுடைய மூன்று மலேசிய இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாபு வகை போதைப்பொருள்கள் என நம்பப்படும் 830 பிளாஸ்டிக் பொட்டலங்கள், 56 பிளாஸ்டிக் மூட்டைகள், 1 பிளாஸ்டிக் பாத்திரம் மற்றும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏப்ரல் 25 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில் செராஸ் பெர்டானாவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்
கெத்தமின் வைகை போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்க்கப்படும் 69 பிளாஸ்டிக் பொட்டலங்கள் மற்றும் சாபு வகை போதைப்பொருள் கொண்ட பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதே நாளில் காலை 1.50 மணிக்கு மேற்கொண்ட சோதனையில் செராஸில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் எக்டாஸி என சந்தேகிக்கப்படும் போதை வஸ்து அடங்கிய 81 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கெத்தமைன் அடங்கிய 26 பிளாஸ்டிக் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1,986 கிலோ சாபு வகை போதைப்பொருள், 97 கிலோ கெத்தமின், 82 கிலோ எக்டாஸி என  மொத்தம்: 2.165 டன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதன் மூலம் 1 கோடியே 5 லட்சம் பேர் உபயோகிக்கக் கூடிய அளவுவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

மேலும் 4 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கும்பல் மூன்று வீடுகளையும் வாடகைக்கு எடுத்து, போதைப்பொருள் சேமிக்கும் இடமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த வழக்கு அபாயகரமான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B – யின் கீழ் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது வாழ்நாள் சிறை மற்றும் குறைந்தது 12 அடி பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் மூவரும்  ஏப்ரல் 25 முதல் மே 1  வரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலக அளவில் இணைப்பை வைத்துள்ளதாகவும், அமெரிக்கா லத்தீன் நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக போதைப்பொருள்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மலேசியாவில் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சம்பவமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *