ONLINE சூதாட்டத்தை நடத்திய 30 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 May, 2025
மே 29,
தலைநகரில் உள்ள வணிக வளாகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தியதற்காகக் கடந்த புதன் கிழமை 30 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட அனைவரும் பணியாளர்கள் என்றும் அவர்கள் தலா RM 3,000 முதல் RM 5,000 வரையில் மாத வருமானம் பெற்று வந்ததாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார். தற்போது முதற்கட்ட விசாரணையைக் காவல்துறையினர் முடித்திருக்கும் நிலையில் மேல் விசாரணைகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 30 பேரில் 29 பேர் உள்ளூர் நபர்கள் என்றும் ஒருவர் சீனா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் 29 பேரில் 23 பேர் ஆண்கள் என்றும் 6 பெண்கள் என்றும் அனைவருமே 20 முதல் 27 வயதுள்ள இளைஞர்கள் என்பதால் அதிக வருமானம் பெற இந்த தொழிலில் ஈடுபட்டதாகவும் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்களும் வங்கிப் பரிவர்த்தனைகளும் பறிமுதல் செய்யப்பட்டதைக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் சம்மந்தப்பட்டவர்களையும் தேடி வருவதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
Seramai 30 individu berusia 20 hingga 27 tahun, termasuk seorang warga China, ditahan kerana terlibat dalam sindiket perjudian dalam talian di sebuah premis komersial di ibu negara. Kesemua mereka merupakan pekerja yang menerima gaji bulanan antara RM3,000 hingga RM5,000.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *