அமெரிக்காவில் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் இதுவரை 30 பேர் பலி!

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன் அருகே 64 பேருடன் சென்ற விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

நதியில் இருந்து இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம், கன்சாசில் உள்ள விசிட்டாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டுச்சென்றது.

இந்த விமானத்தில் சுமார் 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். இந்நிலையில் விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டு இருந்த ராணுவத்துக்கு சொந்தமான பிளாக் ஹாக் பயிற்சி ஹெலிகாப்டர் மீது மோதியது. ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் விமானம், ஹெலிகாப்டர் இரண்டும் வெடித்து சிதறி. பொடோமாக் நதியில் விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அவசரகால மீட்புப் படை வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த 64 பேர் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்கள் என 67 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

நேற்று முன்தினம் விபத்து நிகழ்ந்த நிலையில் நேற்று மாலை வரை 30 பேரின் சடலங்கள் மட்டுமே நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நதியில் தேடும் பணி நடந்து வருகிறது. விமான விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நதியில் விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து கிடந்ததாக மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த நதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

விமானத்தில் பனி சறுக்கு வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விசிட்டாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு விமானத்தில் வந்துள்ளனர். மேலும் ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன்கள் யெவ்ஜெனியா ஷிஷ்கோவா மற்றும் வாடிம் நவ்மோவ் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் விபத்தில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *