லெபனான் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலி!
- Muthu Kumar
- 04 Oct, 2024
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் அருகே ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல், லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை மேற்கொள்வதாக அறிவித்து, லெபனானின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.குறித்த தாக்குதல் இஸ்ரேலிய படை நுழையக் கூடிய இடங்களான ஒடெய்சா மற்றும் கெஃபார் கிலா ஆகிய இடங்களில் ஹிஸ்புல்லா போராளிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது.
இதனையடுத்து, ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று பலத்த வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்வத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 151பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் லெபனான் குடிமக்களை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *