ரஷ்யாவை விலக்கி ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இணைந்த 3 நாடுகள்!

- Muthu Kumar
- 10 Feb, 2025
இரண்டே நாட்களில் பால்டிக் நாடுகள் ரஷ்யாவிலிருந்து பிரிந்து ஐரோப்பிய ஒன்றிய மின் கட்டமைப்பில் இணைந்துள்ளன. எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகள், ரஷ்யாவின் மின் கட்டமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய மின்கட்டமைப்பில் இணைந்துள்ளன.
இந்த மாற்றம் 2007 முதல் திட்டமிடப்பட்டதாலும், 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்ததைத் தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்டதாலும் நடந்துள்ளது.
இது பால்டிக் நாடுகளிடையே முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இதற்கான விழா லிதுவேனியாவின் தலைநகரில் நடந்தது. அப்போது இந்த முக்கிய நடவடிக்கை குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், "இன்று வரலாறு உருவாக்கப்படுகிறது. இது உளவுத்துறை அழுத்தங்களிலிருந்து விடுதலையை குறிக்கிறது," என கூறினார்.
முன்னதாக, எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகியவை ரஷ்யாவில் இருந்து மின்சாரத்தை வாங்குவதை 2022-ல் நிறுத்தினாலும், அவர்கள் Brell என அழைக்கப்படும் மின் கட்டமைப்பில் இணைந்திருந்தனர்.இது மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இவ்வமைப்பு பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
இந்த மாற்றம் 1.6 பில்லியன் யூரோக்கள் முதலீட்டில் நடந்தது, அதில் பெரும்பாலான நிதி ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.இந்த மாற்றம் இரண்டே நாட்களில் நடந்தது. சனிக்கிழமை ரஷ்யா இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு, 24 மணி நேரம் தனியாக இயங்கி, ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய மின் கட்டமைப்பில் இணைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *