அமெரிக்காவில் இந்தியாவின் 3 முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம்- ஏன்?

top-news
FREE WEBSITE AD

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின்  பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றார்.பல்வேறு முதலீடுகள் சார்ந்த சந்திப்புகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தினமும் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக இந்த சந்திப்பில் குவிந்து வருகிறது.

மறுபக்கம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி டெக்சாஸில் அவர் இந்தியர்களிடையே பேசினார்.

அப்போது அவர் லோக்சபா தேர்தல் முடிவுகள், ஆர்எஸ்எஸ்- காங்கிரஸ் வேறுபாடு என பல விவகாரங்கள் குறித்தும் பேசினார். லோக்சபா தேர்தலுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மீது மக்களுக்கு பயம் போய்விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் உள்ள ராகுல் காந்தி​​டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பேசினார். அப்போது தான் ராகுல் காந்தி இந்த கருத்துகளை தெிவித்தார்.

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் இதேபோல் அமெரிக்கா செல்கிறார். அவர் தனிப்பட்ட சொந்த பயணமாக அமெரிக்கா செல்கிறார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட சில உயர்மட்ட தலைவர்களை சந்திக்க அவர் அமெரிக்கா செல்வதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மறுத்தார். இந்த பயணம் முற்றிலும் தனிப்பட்டது, தனிப்பட்ட காரணங்களுக்காக செல்கிறேன் , செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நான் எனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை நான் சந்திப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. இது தனிப்பட்ட பயணம்" என்று அவர் விளக்கி உள்ளார்.

இப்படி ஒரே நேரத்தில் நாட்டின் 3 பெரிய தலைவர்கள் அமெரிக்கா சென்றுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆதரவினர் சிலர் இதை டீப் ஸ்டேட் வேலை என்று கூற தொடங்கி உள்ளனர். அதாவது இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு எதிராக சதி செய்ய அமெரிக்காவில் நடக்கும் சதி என்றெல்லாம் கூற தொடங்கி உள்ளனர். தங்கள் கற்பனை குதிரைகளை கட்டவிழுத்து விட்டு இந்த பயணங்களை சார்ந்து கற்பனை கருத்துக்களை எழுத தொடங்கி உள்ளனர்,

முன்னதாக வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது. அப்போதும் அதற்கு பின் அமெரிக்காவின் டீப் ஸ்டேட் வேலை இருப்பதாக கூறப்பட்டது. டீப் ஸ்டேட் என்பது சிஐஏ ஆகும். உலகில் பல நாடுகளில் ஆட்சி கவிழ, போர் ஏற்பட டீப் ஸ்டேட் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இப்போது அதே டீப் ஸ்டேட்டை வைத்து பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *