கேளிக்கை மையத்தில் 43 வெளிநாட்டுப் பெண்கள் கைது!

top-news

மே 20,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 43 வெளிநாட்டுப் பெண்கள் கேளிக்கை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர். சரவாக்கில் உள்ள Serian, Bau, Kuching ஆகிய 3 மாவட்டங்களில் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 42 இந்தோனேசியப் பெண்களும் அவர்களைப் பாதுகாத்து வந்த 3 இந்தோனேசிய ஆண்களும் 1 பிலிப்பைன்ஸ் பெண்ணும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையை 18 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டதாகவும் சந்தேகத்திற்குரிய கேளிக்கை மையங்களில் மொத்தம் 71 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில் சுற்றுலா பயணிக்கானத் தற்காலிகக் கடப்பிதழில் மலேசியாவுக்கு வந்து காலாவதியாகியும் சட்டவிரோதமாக மலேசியாவிலேயே தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த 43 வெளிநாட்டுப் பெண்களும் 3 வெளிநாட்டு ஆண்களும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 3 கேளிக்கை மையத்தின் உரிமையாளர்களையும் விசாரிக்கவிருப்பதாகச் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Seramai 43 wanita asing dan 3 lelaki warga Indonesia ditahan dalam serbuan di pusat hiburan di Serian, Bau dan Kuching, Sarawak. Mereka didapati tinggal secara haram di Malaysia selepas pas lawatan tamat tempoh. Tiga pemilik pusat hiburan disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *