RM 44 லட்சம் மதிப்பிலான் பாலியல் பொருள்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 7: கடந்த ஜூலை 30 ஆம் தேதி,  பினாங்கு, கெடா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் ஒப்ஸ் லெகசி 2.0 நடவடிக்கையின் கீழ் 44 லட்சம் வெள்ளி மதிப்பிலான மொத்தம் 527 வகையான பாலியல் தூண்டுதல்களுக்கான் பொருள்கள் மற்றும் பதிவு செய்யப்படாத தயாரிப்புகள், 11 டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

மூன்று மாநிலங்களில் சுகாதார அமைச்சகத்தின் மருந்து அமலாக்கப் பிரிவு நடத்திய 24 சோதனைகளில், இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய நடவடிக்கையில், இந்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பினாங்கில் உள்ள தொழிற்சாலை மற்றும் கிடங்கு மற்றும் மூன்று மாநிலங்களில் பொருட்களை விற்கும் கடைகள், வளாகங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் உளவுத்துறையின் இரண்டு வருடக் கண்காணிப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அமைச்சகத்தின் மருந்தியல் அமலாக்கப் பிரிவு இயக்குநர் ஜவாவி அப்துல்லா தெரிவித்தார்.

பினாங்கில் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களின் மதிப்பு ரிங்கிட் 39 லட்சம் என்றும், கெடாவில் 452,000  மற்றும் ஜொகூரில் 65,000 என்றும் ஜவாவி கூறினார்.

விசாரணையில் உதவுவதற்காக தொழிற்சாலை மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் உட்பட 20 முதல் 50 வயதுடைய ஒன்பது நபர்களின் வாக்குமூலங்களை அவர்கள் பதிவு செய்ததாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *