டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல 45 நிமிடங்கள்-எலான் மஸ்க் அசத்தல்!

- Muthu Kumar
- 24 Nov, 2024
எலான் மஸ்க் ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் புதிய போக்குவரத்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எலக்ட்ரிக் கார்களை தயாரித்து கார் விற்பனையில் சாதனை படைத்த எலான் மஸ்க் , இப்போது வான்வெளியில் புதிய சாதனைகளை படைக்க அஸ்திவாரம் போட்டு வருகிறார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் வேறு ஒரு நாட்டை அடையக்கூடிய புதிய போக்குவரத்து முறையை எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த திட்டம் குறித்து, டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காணொளி வெளியிட்டுள்ளது.
அதில், வரவிருக்கும் அதிவேக ராக்கெட்டுகள் பொருத்தப்பட்ட விமானங்கள் சுமார் 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து, குறிப்பிட்ட இடத்தை சில நிமிடங்களில் அடைய முடியும். உதாரணமாக, நியூயார்க்கில் இருந்து ஷாங்காய் செல்ல 30 நிமிடங்களும், டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல 45 நிமிடங்களும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் ரெகுலர் விமானங்கள் போலவே பறக்க தொடங்கும். வானத்தில் குறிப்பிட்ட உயரத்தை எட்டியதும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் ராக்கெட்டுகளுக்கான இன்ஜீன் இயங்க தொடங்கி ராக்கெட் வேகத்தில் விமானம் பறக்க தொடங்கும். விமானத்தின் அடி பகுதியில் ராக்கெட் இன்ஜீன் பொருத்தப்பட்டிருக்கும். ஆயிரம் பேர் வரை ஒரு விமானத்தில் பயணிக்க முடியும்.
முன்னதாக கன்கர்டு விமானங்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. கடந்த 2003 ஆம் ஆண்டு கன்கர்ட் சூப்பர் சானிக் விமானங்கள் பறப்பது நிறுத்தப்பட்டது. அடிக்கடி விபத்தில் சிக்கியதால் கன்கர்டு விமானங்கள் விமானப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்டன.எலான் மஸ்க்கின் புதிய போக்குவரத்து முறை, தற்போதைய விமானங்களை விட பல மடங்கு வேகமாக இருப்பதால், உலகின் எந்த மூலையிலும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை எளிதாக சந்திக்க வழிவகுக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *