அந்நியத் தொழிலாளர்கள் 48 பேர் அதிரடி கைது!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜாம், மே 30: நேற்று புக்கிட் மெர்தாஜாமில் இரண்டு மின்னணு உற்பத்தி தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக 48 வெளிநாட்டு தொழிலாளர்களை மாநில குடிநுழைவுத் துறை கைது செய்தது.

பினாங்கு குடிநுழைவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், தொழிலாளர்கள் தங்கள் விசா தேதிகளுக்கு மேல் தங்கியிருந்தது மற்றும் அவர்களின் ஆவணங்களில் குறிப்பிடப்படாத துறைகள், பணி அனுமதிகளின் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டது.

சோதனையின் போது இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தம் 103 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் சியாம்சுல் ஃபித்ரி அகமது தெரிவித்தார்.

20 முதல் 49 வயதுக்குட்பட்ட சம்பந்தப்பட்ட 48 பேரும் இந்தோனேசியா, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்!

வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும்போது வேலைவாய்ப்புச் சட்டங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு முதலாளிகளுக்கு அவர் நினைவூட்டினார்!


Seramai 48 pekerja asing ditahan oleh Imigresen Pulau Pinang dalam serbuan dua kilang elektronik di Bukit Mertajam kerana pelbagai kesalahan imigresen. Mereka berasal dari enam negara dan majikan diingatkan supaya mematuhi undang-undang pengambilan pekerja.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *