கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!

- Muthu Kumar
- 18 Feb, 2025
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதாவது அந்த வீட்டில் சேத்தன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபாலி (43) என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் சேத்தனின் தாயார் பிரியம் வதா (62). இவர்கள் நால்வரும் தான் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் சேத்தன் தன்னுடைய மனைவி அம்மா மற்றும் மகன் ஆகியோருக்கு விஷம் கொடுத்த நிலையில் பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறப்பதற்கு முன்பாக தாங்கள் தற்கொலை செய்யப் போகும் செய்தியை அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய சகோதரருக்கு கூறியுள்ளார். உடனடியாக அவர் ரூபாயிலின் வீட்டிற்கு தகவல் கொடுத்து அங்கு சென்று பார்க்குமாறு கூறிய நிலையில் அதற்குள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டனர். இதில் சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்ததாக கூறப்படும் நிலையில் நிதி நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கிய நிலையில் என்னுடைய மரணத்திற்கு நான் மட்டும்தான் பொறுப்பு இதற்காக என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை யாரும் துன்புறுத்தாதீர்கள் என்று எழுதியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *