அரசாங்க இடத்தை துஷ்பிரயோகப்படுத்தியதாக நம்பப்படும் 4 காவல்துறையினர் சிலாங்கூரிலிருந்து இடமாற்றம்!
- Muthu Kumar
- 08 Oct, 2024
அக்.8-
சொந்தமாக விருந்து ஏற்பாடு செய்து அரசாங்க தலத்தை துஷ்பிரயோகப்படுத்தி இருக்கக் கூடும் என்று நம்பப்படும் ஷா ஆலமிலுள்ள போலீஸ் நிலையத்தின் ஓர் இன்ஸ்பெக்டர் தகுதி கொண்ட அதிகாரி உட்பட 4 போலீஸ்காரர்கள் சிலாங்கூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.தங்களின் அலுவலகத் தலத்திற்குள் 3 பெண்கள் உட்பட பொதுமக்கள் 4 பேரை காப்பரல் தகுதிக் கொண்ட ஒரு போலீஸ்காரர் கொண்டு வந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார். அந்த விருந்து சம்பவத்தில் தங்களின் அலுவலகத்திற்கு பொதுமக்களை அழைத்து வந்து இசையுடன் கூடிய விருந்து வைத்தார்.
இது நிரந்தர நடவடிக்கை நடைமுறைக்கு (எஸ்ஒபி) எதிராக இருப்பது அதாவது எந்த அதிகாரப்பூர்வ அலுவலுமின்றி பொதுமக்கள் யாரையும் அரசாங்கத் தலங்களுக்குக் கொண்டு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் இவர்கள் அனைவரும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தில் காப்பரல் தகுதிக் கொண்டவர் மட்டுமின்றி சார்ஜன், சார்ஜன் மேஜர் மற்றும் இன்ஸ்பெக்டர் தகுதி கொண்ட இதர 3 பேரும் அரசாங்கத் தலத்தை துஷ்பிரயோகப்படுத்திய காரணத்தால் சிலாங்கூரிலிருந்து மாற்றம் செய்யப்பட்டனர் என்று மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றச் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது டத்தோ ஹுசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *