மூத்த குடிமக்களுக்காக 56 ஆயிரம் இலவச தடுப்பூசிகள் இன்னமும் உள்ளன!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 21-

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச இன்ஃப்ளூவன்ஸா தடுப்பூசி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அதிக ஆபத்துள்ள மூத்த குடிமக்களை சுகாதார அமைச்சு வலியுறுத்துகிறது.

வரவிருக்கும் சளிக் காய்ச்சல் பருவத்திற்கு முன்னதாக, நாள்பட்ட அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மூத்த குடிமக்கள் இன்ஃப்ளூவன்ஸா தடுப்பூசி திட்டம் என்று அழைக்கப்படும் சுகாதார அமைச்சின் இந்த முன்முயற்சி, இவ்வாண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நாடு முழுமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்க சுகாதார மையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.“அது தொடங்கப்பட்டது முதல் இதுவரையில், தகுதி பெற்ற மூத்த குடிமக்களில் 65.16 விழுக்காட்டினர் இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 56,237 தடுப்பூசிகள் இருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இத்திட்டம் முடிவடைவதற்கு முன்னர், அதை செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிறெத்துறது.நாடு முழுமையிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 649 அரசாங்க சுகாதார கிளினிக்குகளில் இத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவ்வமைச்சு தெரிவித்தது.

இத்திட்டத்திற்கான தடுப்பூசி, மருத்துவச் சாதனங்கள் மற்றும் சுகாதாரச் சேவை பணியாளர்களுக்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தினால் ஏற்றுக்
கொள்ளப்பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளன.இத்தடுப்பூசியை பெறுவதற்கான முன்பதிவை மக்கள் மைசெஜாத்ரா செயலி மூலம் செய்து கொள்ளலாம், அதோடு. மூத்த குடிமக்களும் அவர்களைப் பாதுகாத்து வருபவர்களும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகங்களுடனும் தொடர்பு கொள்ளலாம் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

மைசெஜாத்ரா செயலி வசதி இல்லாத மூத்த குடிமக்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள 649 அரசாங்க சுகாதார கிளினிக்குகளுக்கு நேரடியாக சென்றும் விவரங்களைப் பெற்று முன்பதிவை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதற்கு தகுதி பெறக் கூடியவர்கள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நீரிழிவு நோய், இதய நோய், நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் அல்லது உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு ஆளாகி இருப்பவர்களும் அடங்குவர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *