அரசாங்க நிலத்தில் உள்ள 6 கோயில்கள் மீது நடவடிக்கை! – பினாங்கு அரசு!

top-news

மே 20,

பினாங்கில் முறையாகப் அதிவு செய்யாமல் இயங்கி வரும் 6 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்களின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகப் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Lim Siew Khim இன்று பினாங்கு மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். பினாங்கில் சட்டவிரோதமாகவும் அரசாங்க நிலத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் வழிபாட்டுத் தளங்களைப் பினாங்கு மாநில அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக PAS கட்சியின் PERMATAN PASIR சட்டமன்ற உறுப்பினர் Amir Hamzah Abdul Hashim குற்றம் சாட்டிய நிலையில் பினாங்கு மாநிலச் சமூக மேம்பாட்டு நலன் இஸ்லாம் அல்லாதோர் நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Lim Siew Khim இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரையில் பினாங்கு மாநில அரசு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் 6 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வருவது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் வடக்கு செபாராங் பிறாயில் 1, தென் செபாராங் பிறாயில் 2, மத்திய செபாராங் பிறாயில் 2, வடக்கிழக்கு மாவட்டத்தில் 1 என மொத்தம் 6 வழிபாட்டுத் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Lim Siew Khim தெரிவித்தார். இது சமய விவகாரம் என்பதால் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் முறையாகப் பதிவு செய்யாமல் இயங்கி வரும் வழிபாட்டுத் தளங்களின் மீது மட்டுமே மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் Lim Siew Khim தெரிவித்தார்.

Kerajaan negeri Pulau Pinang akan mengambil tindakan terhadap enam tempat ibadat bukan Islam yang beroperasi secara haram di atas tanah kerajaan tanpa dokumen sah. Tindakan ini diambil selepas siasatan dan aduan oleh wakil rakyat PAS mengenai isu pematuhan undang-undang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *