சாப்பிட மறுத்த காரணத்தால் 6 வயது பாலர் பள்ளி மாணவர் கோகீஸ்வரன் சித்ரவதை!

- Muthu Kumar
- 03 May, 2025
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், மே 3-
டாமன்சாரா டாமாய் பாலர் பள்ளியில் கல்வி பயிலும் 6 வயது மாணவர் கோகீஸ்வரனுக்கு நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் கன்னத்தில் ஆசிரியர் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த மாணவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று அம்மாணவரின் சிற்றன்னை திருமதி திவ்யா கணேசன் கூறினார்.
கடந்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி வழக்கம் போல் பாலர் பள்ளிக்குச் சென்ற மாணவர் கோகீஸ்வரன். உணவு உண்ண ஆசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் உணவு உட்கொள்ள கோகீஸ்வரன் மறுத்துள்ளார்.ஏன் சாப்பிடவில்லை என்று கேட்ட ஆசிரியரிடம் உணவு பிடிக்கவில்லை என்று கோகீஸ்வரன் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிற்றுண்டிச் சாலையில் உள்ள கரண்டியை எடுத்து அடுப்பில் சூடாக்கி கோகீஸ்வரன் கன்னத்தில் சூடு வைத்துள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட ஆசிரியர், ஈவு இரக்கமின்றி கோகீஸ்வரனை அடித்துள்ளார். ஏதோ சின்னக் காயம் என்று எண்ணிய என் அக்காவுக்கு பிறகுதான் தெரிந்தது. அதுவும் மருத்துவர், இதுவே மோசமான தீப்புண் காயம் என்றும் உடனடியாக கால் தொடையில் உள்ள சதையை எடுத்து கன்னத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதும் என் அக்கா பதறிப் போய்விட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக சென்றால் அங்கே எங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் தரப்பு புகார் செய்துள்ளனர்.
எங்கள் புகாரை காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். செய்த புகாரை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.இதன் காரணமாகவே நாங்கள் வேறு வழியின்றி புக்கிட் அமான் காவல் துறைக்கு சென்று புகார் அளித்தோம் என்று திருமதி திவ்யா கூறினார்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவத்தால் கோகீஸ்வரன்குடும்பத்தார் கொதித்துப் போயுள்ளனர் என்றும் திருமதி திவ்யா சொன்னார்.பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் சூடு வைக்கப்பட்ட மாணவர் கோகீஸ்வரனுக்கு நீதி கிடைக்குமா? நியாயம் பிறக்குமா...? இப்படியொரு மாணவரை கொடூரமாக சித்ரவதை செய்த நபர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது.
Seorang pelajar 6 tahun, Kokiswaran, cedera teruk apabila gurunya mencederakan pipinya dengan senduk panas kerana enggan makan. Keluarga mangsa membuat laporan polis setelah aduan awal tidak diendahkan, menuntut keadilan dan hukuman terhadap guru tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *