இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகளை எண்ணிவிட்டார்கள்-எலான் மஸ்க்!

top-news
FREE WEBSITE AD

நவ.,5ல் நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அடுத்தாண்டு அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். மேலும் தனது அமைச்சரவையில் பணியாற்ற கூடியவர்களையும் தேர்வு செய்து விட்டார்.

இந்நிலையில், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கலிஃபோர்னியாவில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிலுவையில் உள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 58.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.தேர்தல் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை. கலிபோர்னியாவில் 3 லட்சம் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

இது குறித்து, எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகளை எண்ணி விட்டார்கள். ஆனால், 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி ஓட்டுகளை இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என எலான் மஸ்க் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஷெர்லி வெபர் கூறும்பொழுது ஓட்டுப்பதிவை மேம்படுத்தவும், மக்கள் ஓட்டளிப்பதை எளிதாக்கவும் தேர்தல் அதிகாரிகள் மெயில் மூலம் ஓட்டளிப்பு முறையை செயல்படுத்தினர்.

இங்கு பெரும்பாலான மக்கள் மெயில் வாயிலாக ஓட்டளித்துள்ளனர். நாங்கள் பெயர் மற்றும் கையொப்பம் சரிபார்க்க வேண்டும். அந்த ஓட்டுச்சீட்டை உண்மையில் அனுப்பியவர் அவர்தானா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனால் ஓட்டுக்களை எண்ணி முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மெயிலில் வரும் ஓட்டுக்களை சரிபார்க்க அதிக நேரம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.3 லட்சம் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. இதனை எண்ணி முடிப்பதற்கு இன்னும் ஒரு வாரங்கள் ஆகலாம். மொத்தமாக இறுதி முடிவுகள் ஒரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.

முடிவுகளை விரைவாக தெரிவிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநில தேர்தல் அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை விரைவாக அறிவிக்க முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *