விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் 6 மாத முகாம் தண்டனை-கிம் ஜாங் உன்!

- Muthu Kumar
- 10 Jan, 2025
வட கொரியாவில் கிம் ஜாங் உன் அதிபராக உள்ள நிலையில் அங்கு அவர் சர்வாதிகார ஆட்சி முறையை பின்பற்றி வருகிறார். அந்த நாட்டின் குடிமக்கள் எப்படி உடை அணிய வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், எந்த கடவுளை வழிபட வேண்டும், என்ன பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து கடுமையான விதிகள் அமலில் உள்ளன. இத்தகைய இக்கட்டான கட்டமைப்பை கொண்டுள்ள வட கொரியாவில் விவாகரத்துக்களை தடுக்கும் விதமாக கிம் புதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில் உடை அணிவதற்கே விதிகள் உள்ள நிலையில், பொதுமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்தும் பல விதிகள் உள்ளன. அதன்படி, அங்கு விவாகரத்து செய்வது கலாச்சாரத்திற்கு புறமபான ஒரு செயலாக கருதப்படுகிறது. இதன் காரணமாக விவாகரத்து பெற விண்ணப்பிக்கும் தம்பதிகள் சுமார் 6 மாதங்கள் வரை தொழிலாளர்கள் முகாம்களில் காலத்தை கழிக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி, விவகாரத்து பெற விரும்பும் பெண்கள் ஆண்களை விட அதிக காலம் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தககது.
வடகொரியா உலகின் ஒரு அங்கமாக இருந்தாலும், அது ஒரு தனி தீவு போல் இயங்குகிறது. அங்கு வசிக்கும் மக்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையையும், கடும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வட கொரியாவில் பொதுமக்களுக்கான சுதந்திரம், பேச்சுரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் கடைபிடிக்கப்படும் நிலையில் அவற்றை மீறினால் மிக கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வடகொரியாவை சேர்ந்த சில சிறுவர்கள் தென் கொரியாவின் தொடர்களை பார்த்ததற்காக கொலை செய்யப்பட்டது வடகொரியாவின் கோர முகத்தை காட்டும் ஒரு சம்பவமாக உள்ளது. இந்த நிலையில், விவாகரத்து பெற விண்ணப்பிக்கும் தம்பதிகள் தொழிலாளர் முகாம்களில் காலத்தை கழிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *