பராமரிப்பு மையத்தில் 7 மாத ஆண்குழந்தை மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 28: கோலாலம்பூரின் தாமான் தானாவ் கோத்தாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்த ஏழு மாத ஆண் குழந்தை கடந்த திங்கள்கிழமை காலை இறந்ததாகத் தெரிவிக்க்கபப்ட்டுள்ளது..

இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக வாங்சா மாஜு காவல்துறைத் துணைத் தலைவர் சியாருல் அனுவார் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் பிற தொடர்புடைய நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத் துறையின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையாளுவறாக அவர் கூறினார்.

குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்தல், புறக்கணித்தல், கைவிடுதல் அல்லது வெளிப்படுத்துதல் ஆகியவை தொடர்பான 2001 குழந்தைச் சட்டத்தின் பிரிவு 31(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM20,000க்கு மிகாமல் அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!

Seorang bayi lelaki berusia tujuh bulan ditemui meninggal dunia di sebuah pusat jagaan kanak-kanak di Taman Danau Kota, Kuala Lumpur. Polis sedang menjalankan siasatan, termasuk mengambil keterangan daripada pengendali pusat jagaan dan individu berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *