கோம்பாக்கில் போக்குவரத்து விதிகளை மீறியதால் 72 சம்மன்கள்! நால்வர் கைது!

- Sangeetha K Loganathan
- 28 Apr, 2025
ஏப்ரல் 28,
கோம்பாக் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 72 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோம்பாக்கிந் முக்கிய சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் அதிகரித்து வந்ததால் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாள்கள் இரவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 178 பேரிடம் சோதனையை மேற்கொண்டதில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் 159 வாகனங்களைச் சோதனையிட்டதில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 72 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sebanyak 72 saman dikeluarkan dan 4 individu ditahan dalam operasi trafik di kawasan sekitar Gombak. Pemeriksaan terhadap 159 kenderaan dan 178 orang telah mendedahkan pelanggaran undang-undang trafik serta penyalahgunaan dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *