வீட்டின் மேல் விழுந்த விண்வெளி குப்பைக்கு நாசாவிடம் 80,000 டாலர் கோரிக்கை?

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது சிறிய அளவிலான விண்வெளி குப்பைகள் உடைந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்த குடும்பத்தினர் நாசாவிடம் 80,000 அமெரிக்க டாலர்களை இழப்பீடாக கோரியுள்ளனர். இந்த சம்பவத்தை சட்ட நிறுவனமான க்ரான்ஃபீல்ட் சம்னர்  தெரிவித்தார். அந்த அறிக்கையில், "மார்ச் 8 ஆம் தேதி புளோரிடாவின் நேபிள்ஸில் உள்ள ஒரு வீட்டின் மீது 700 கிராம் எடையுள்ள பொருள் மோதியது, வீட்டின் கூரையில் பெரிய துளை ஏற்பட்டது.

2021 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) கழிவுகளாக வெளியிடப்பட்ட பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளின் சரக்குகளின் ஒரு பகுதியாக இருப்பதை நாசா பின்னர் உறுதிப்படுத்தியது. "பூமியில் விழும் முன் முழுவதுமாக எரிவதற்குப் பதிலாக, அதன் ஒரு பகுதி எரியாமல் வீட்டின் மீது விழுந்தது" என்று நாசா அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது வீட்டின் உரிமையாளரான ஓடெரோவின் மகன் வீட்டில் இருந்துள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இதன் காரணமாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிடம் 80,000 டாலர்கள் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று ஓட்டேரோவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதற்கு நாசா விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *