82 வயதில் குடியுரிமை உறுதி கடிதம் கிடைத்தது!
- Sangeetha K Loganathan
- 15 Oct, 2024
ஜெராம் பாடாங் தோட்டத்தில் வசிக்கும் கல்யாணி த/பெ பைனிமியா தனது 82 ஆவது வயதில் குடியுரிமைக்கான உறுதி கடிதம் அண்மையில் கிடைக்கப்பெற்றார். மலேசியாவில் பிறந்த இவர் தனது 12 ஆவது வயதில் சிவப்பு அடையா அட்டையைப் பெற்றார். பலமுறை குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தும் அவை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக கடந்தாண்டு மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தார். இவருக்கு இவ்வட்டார அரசியல் தலைவர்கள் பலரும் முயற்சி செய்துள்ளனர். குறிப்பாக ஜெராம் பாடாங் தோட்ட மருத்துவ உதவியாளர் (டிரசர்) இளங்கோ பல்வேறு முயற்சிகளை செய்தாக கல்யாணி தெரிவித்தார். மனம் தளராத கல்யாணியின் தொடர் முயற்சியாள் அடுத்து அவருக்கு கூடிய விரைவில் நீல அடையாள அட்டை கிடைக்கவுள்ளது. இதன் வழி அரசாங்கத்தின் சமூக நல உதவிகள் பெறுவதற்குரிய வாய்ப்புகளும் கல்யாணிக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. இவ்வேளையில் தனக்கு குடியுரிமை கிடைப்பதற்கு உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கல்யாணி நன்றி கூறினார்.
Kalyani, 82 tahun, dari Ladang Jeram Padang, berjaya memperoleh surat pengesahan kewarganegaraan selepas bertahun-tahun mencuba. Dengan bantuan pemimpin tempatan, beliau dijangka menerima kad pengenalan biru dan layak mendapat bantuan kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *