ஊசி போட்டதும் தூங்கிய 9 வயது சிறுமி- தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.மருத்துவமனை மீது புகார்!

- Muthu Kumar
- 14 Apr, 2025
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆதிலட்சுமி என்ற 9 வயது சிறுமி வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அஜித் மற்றும் சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் ஆதிலட்சுமிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஒரு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் மருத்துவமனையில் சிறுமி தொடர்ந்து சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை சிறுமிக்கு ஒரு ஊசி போட்டுள்ளனர். அதன் பிறகு சிறுமி தூங்குவதற்காக சென்ற நிலையில் தூங்கிய சிறுமி அதன்பின் எழவே இல்லை. பின்னர் பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவமனை அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு ஜன்னலை உடைத்தனர். இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *