மீண்டும் வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் 91 பேர் பலி!
- Muthu Kumar
- 05 Aug, 2024
வங்கதேசத்தில் மீண்டும் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிகை 91 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில்,ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு, அரசு வேலையில் தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
இதனால் அந்நாட்டில் அமைதி திரும்பி வந்த நிலையில் நேற்று பிரதமர் ஹேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலகக்கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் ஆளும் அவாமி லீக் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 91 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து,நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக வங்காளதேச உள்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே வங்கதேசத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *