சரவாக்கின் அரசியல் கொள்கையை சபாவினால் பின்பற்ற முடியாது!

- Muthu Kumar
- 29 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 29 -
சரவாக் மாநில அரசியலில், மாநிலக் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி மற்றும் தேசிய அளவிலான கட்சிகளுக்கு இடமில்லை என்ற கொள்கையை சபாவினால் பின்பற்ற முடியாது என்று, சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ சாலே சைட் கெருவாக் தெரிவித்துள்ளார்.
சபாவில் பக்காத்தான் ஹராப்பானை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால், தேசிய முன்னணியை ஏற்றுக் : கொள்ளவே முடியாது என்ற "நியாயமற்ற” கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக, உசுக்கான் சட்டமன்ற உறுப்பினருமான சாலே கூறியுள்ளார்.
"சரவாக்கின் கொள்கையை பின்பற்ற நாம் உண்மையிலேயே விரும்பினால், தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கூட்டணிகள் உட்பட தேசிய அதாவது தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் நாம் அவசியம் நிராகரிக்க வேண்டி வரும்.
“ஆனால், சபா மாநிலம் சரவாக்கைப் போன்றில்லாமல் மாறுபட்டிருக்கிறது. தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் இதர உள்ளூர் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம், சபாவில் நிலைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது” என்று முகநூல் பதிவொன்றில் சாலே தெரிவித்துள்ளார்.
சரவாக்கை, காபுங்ஙான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது. அக்கூட்டணியில் பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து கட்சி, சராக் மக்கள் கட்சி, ஜனநாயக முன்னேற்றக் கட்சி (பிடிபி) மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் உள்ளூர் கட்சிகளாகும்.
Bekas Ketua Menteri Sabah, Salleh Said Keruak berkata, Sabah tidak boleh mengikuti dasar Sarawak yang hanya membenarkan parti tempatan. Sabah memerlukan kerjasama parti nasional seperti Barisan Nasional dan Pakatan Harapan untuk mengekalkan kestabilan negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *