மேடையில் அமித்ஷா பேசியதன் பின்னணி - தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

மேடையில் அமித் ஷா உடன் தமிழிசை சவுந்தராஜன் பேசும் காணொளி குறித்த சர்ச்சை குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே  சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்ககைய நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்சியின் போது, மேடையில் அமர்ந்து இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தராஜன் வணக்கம் வைத்தார். அப்போது அவரை அழைத்து பேசும் அமித்ஷா, விரலை நீட்டியபடி பேசும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. 

தமிழிசை சவுந்தராஜனிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டுவது போன்ற காணொளியை கேரளா காங்கிரஸ் கமிட்டி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருந்தது. 

இது தொடர்பாக 'எக்ஸ்' சமூகவலைத்தளத்தில் தமிழிசை சவுந்தராஜன் பதிவிட்டுள்ள பதிவில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன், 2024 தேர்தலுக்கு பிந்தைய களநிலவரம் குறித்தும், கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கேட்டதாகவும், நான் விவரித்துக் கொண்டிருந்தபோது, ​​நேரம் இல்லாத காரணத்தால் மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைத் தீவிரமாகச் செய்யுமாறு அறிவுரை கூறியதாக  தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக எழும் தேவையற்ற யூகங்களை தெளிவுப்படுத்தவே இதை பதிவிடுவதாக தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்டோரின் எக்ஸ் வலைத்தள கணக்குகளையும் டேக் செய்து உள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *