நாட்டில் இன்சுலின் பற்றாக்குறையா? சுகாதார அமைச்சு விளக்கம்!
- Shan Siva
- 23 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 23: இன்சுலின் பற்றாக்குறை நெருக்கடி பற்றிய சர்ச்சையை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. அதன் பல சப்ளையர்களில் ஒருவர் மட்டுமே உற்பத்தி சிக்கல்களில் சிக்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 41 மருந்துகளில், ஹியூமன் இன்சுலின் மட்டுமே பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்கிறது.
ஆனால், ஒட்டுமொத்தமாக, சர்க்கரை நோய்க்கான சிகிச்சை தடையின்றி உள்ளது என்பதை அமைச்சு வலியுறுத்த விரும்புவதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்களால் ஹியூமன் இன்சுலின் வழங்கப்படுவதாகவும், அவற்றில் ஒன்று உள்ளூர் நிறுவனம் என்றும் அமைச்சு கூறியது.
அந்த உள்ளூர் நிறுவனம் உற்பத்தி சிக்கல்களில் சிக்கியது, இது அமைச்சின் குறிப்பிட்ட அந்த இன்சுலின் விநியோகத்தை பாதித்தது.
ஆனாலும், நோயாளிகளின் சிகிச்சை தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மருத்துவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் இன்சுலின் அனலாக்ஸ் உட்பட பல அணுகுமுறைகளை அமைச்சு எடுத்துள்ளது.
அதன் சப்ளையர்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் போதுமான இன்சுலின் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டதாகவும் அமைச்சு கூறியது.
சில பொது சுகாதார வசதிகள் இப்போது இந்த வாரம் இன்சுலின் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பற்றாக்குறை முக்கியமான நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *