அமைச்சர் பணியை ரபிஸி தொடர்ந்தார்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 27-

டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி பொருளாதார அமைச்சில் உள்ள தமது அலுவலகத்தில் வழக்கம்போல் பணியாற்றுவதை தொடங்கி இருக்கின்றார்.

வெள்ளிக்கிழமை நடந்த கட்சித் தேர்தலில் தமது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் தோல்வி அடைந்த பின்னர், தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்ற ஆருடங்களுக்கு மத்தியில் அவர் தொடர்ந்து அமைச்சர் பணியை ஆற்றத் தொடங்கியுள்ளார்.தமது அமைச்சுக்கு வந்து தமது பணியை ரபிஸி தொடங்கி இருப்பதை அவரின் பத்திரிகை செயலாளர் ஃபர்ஹான் இக்பால் நேற்று உறுதிப்படுத்தினார்.

“ஆம், நேற்று அவர் வழக்கம்போல் தமது அமைச்சுக்கு சென்றார்" என்று ஃபர்ஹான் தெரிவித்தார்.கட்சித் தேர்தலில் தமது துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதில் தாம் தோல்வியுற்றால், தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட தாம் தயாராக இருப்பதாக, இம்மாதம் 7ஆம் தேதி ரபிஸி அறிவித்திருந்தார்.அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கட்சியில் ஒரு சாதாரண தலைவராக இருந்து கட்சிக்காக பணியாற்றப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

துணைத் தலைவருக்கான போட்டியில், நூருல் இஸ்ஸா அன்வார் மொத்தம் 9,803 வாக்குகள் அல்லது 71.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். ரபிஸிக்கு 3,866 வாக்குகள் அல்லது 28.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

Datuk Seri Rafizi Ramli kembali bertugas seperti biasa di Kementerian Ekonomi walaupun tewas dalam pemilihan jawatan timbalan presiden parti. Beliau tidak meletak jawatan menteri seperti dijangka sebelum ini oleh sesetengah pihak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *