நேற்றைய பிகேஆர் மாநாட்டில் ரபிஸி கலந்து கொள்ளவில்லை!

- Muthu Kumar
- 25 May, 2025
ஜொகூர் பாரு, மே 25-
தமது துணைத் தலைவர் பதவியை நூருல் இஸ்ஸா அன்வாரிடம் இழந்த பின்னர், பிகேஆர் கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல், டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி கோலாலம்பூர் திரும்பி விட்டார்.கட்சித் தேர்தலுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவில் மாநாடு தொடங்கியபோது அதில் கலந்து கொண்டிருந்த ரபிஸி நேற்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாநாட்டில் காணப்படவில்லை.
வெள்ளிக்கிழமை இரவில், ஜொகூர் பாருவில் உள்ள பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கட்சி மாநாடு தொடங்கியபோது அதில் கலந்து கொண்டிருந்த ரபிஸி நேற்று காலையில் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை, பொருளாதாரத்துறை அமைச்சருமான அவரின் பத்திரிகை செயலாளர் ஃபர்ஹான் இக்பால் நேற்று சனிக்கிழமை காலையில் உறுதிப்படுத்தி இருந்தார்.
“ரபிஸி காலையில் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். புதிய துணைத் தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரபிஸி கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்” என்று எஃப்எம்டியிடம் ஃபர்ஹான் தெரிவித்தார்.
Rafizi Ramli tidak menghadiri hari terakhir Kongres PKR selepas tewas jawatan Timbalan Presiden kepada Nurul Izzah Anwar. Beliau meninggalkan Johor Bahru dan pulang ke Kuala Lumpur pagi Sabtu, disahkan oleh setiausaha akhbarnya, Farhan Iqbal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *