ரஃபிஸி தோல்வி! கண்கலங்கி குரல் உடைந்து பேசிய சைஃபுடின்!

- Shan Siva
- 24 May, 2025
ஜொகூர்பாரு, மே 24: நேற்று கட்சித் தலைமைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரஃபிஸி ரம்லி நூருல் இஸா அன்வாரிடம் தோல்வியடைந்த தருணங்களை நினைவு கூர்ந்தபோது, பிகேஆர் முன்னாள் பொதுச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கண்கலங்கினார்.
கட்சியின் தேசிய
மாநாட்டில் பேசிய சைஃபுதீன், மற்றவர்கள்
தங்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ரஃபிஸியுடன் மண்டபத்திலிருந்து வெளியே சென்றதாக அவர்
கூறினார்.
கட்சியின் தேசிய
மாநாட்டின் இறுதி நாளான இன்று ரஃபிஸி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது செய்தித்
தொடர்பாளர் ஃபர்ஹான் இக்பால், அவர்
கோலாலம்பூருக்குத் திரும்பியதை உறுதிப்படுத்தினார்.
கட்சித் தேர்தல்களின் போது உடைந்திருக்கக்கூடிய உறவுகளைச் சரிசெய்யும் பெரும் கடமை கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு உள்ளது என்று சைஃபுதீன் கூறினார்!
Bekas Setiausaha Agung PKR, Saifuddin Nasution Ismail, menitiskan air mata mengenang kekalahan Rafizi Ramli kepada Nurul Izzah Anwar dalam pemilihan timbalan presiden parti. Saifuddin membawa Rafizi keluar dari dewan dan memohon maaf, bimbang parti kehilangan beliau. Rafizi tidak hadir pada hari akhir mesyuarat nasional. Saifuddin menyeru Anwar memulihkan hubungan yang retak dalam parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *