ரஃபிஸியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்-அமினுதீன் ஹருன்!

- Muthu Kumar
- 26 May, 2025
கோலாலம்பூர், மே 26:
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரஃபிஸி ராம்லி தோல்வியடைந்திருந்தாலும், ரஃபிஸியின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று பிகேஆர் உதவித் தலைவர் அமினுதீன் ஹருன் நம்புகிறார்.
ரஃபிஸியின் தீவிர கூட்டாளிகளில் ஒருவர் என்று அறியப்படும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் அமினுதீன்,ரஃபிஸியின் ஆதரவாளர்களிடையே ஏற்படும் எந்த ஏமாற்றமும் குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்று நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள், ஆனால் முன்னோக்கிச் செல்லும் ஒரு வழியாக கிளை மற்றும் பிரிவு மட்டங்களில் செயல்படுத்தக்கூடிய உத்திகளில் கவனம் செலுத்துவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தோல்வி தொடர்பாக யோசிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டு இறுதியில் பிகேஆரை ஆதரிக்கத் திரும்புவார்கள் என்று தாம் நம்புவதாகத் நேற்று இரவு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
PKR naib presiden Aminuddin Harun yakin penyokong Rafizi Ramli tidak akan keluar parti walaupun kalah dalam pemilihan. Beliau percaya kekecewaan hanya sementara dan mereka akan terus menyokong PKR melalui strategi di peringkat akar umbi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *