ஜெகன்மோகன் ரெட்டியா? அல்லது தெலுங்கு தேசமா? யார் ஆட்சியைப் பிடிப்பது !

- Muthu Kumar
- 18 May, 2024
இந்தியாவிலேயே அதிக வாக்கு சதவீதம் ஆந்திராவில் பதிவாகி உள்ளது. இந்தச் சாதனை ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா? அல்லது நன்மை தருமா என்பது மிக முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்காகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 82 சதவீத வாக்குகள் பதிவாகி, அதன் வாக்காளர் எண்ணிக்கையால் கவனத்தை ஈர்க்கிறது
இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக 81.86% வாக்குப்பதிவுகள் பதிவாகியிருக்கின்றன.
இந்தளவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால், அது யாருக்குச் சாதகமாக முடியும்? அல்லது யாருக்குப் பாதகமாக முடியும் என்ற கேள்வி இப்போது புதியதாக எழுந்துள்ளது.
இதுவரை நடந்துமுடிந்துள்ள மக்களவைத் தேர்தல்களில் அதிக அளவுக்கு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ள முதல் மாநிலமாக ஆந்திரா ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது.
இந்தளவுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்காகக் காரணம், மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் சேர்ந்து நடைபெற்றதுதான் என்றும் கூறப்படுகிறது
இது குறித்து ஆந்திராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா, "பல சாவடிகளில் அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
"வாக்கு சதவீதம் மக்களின் உயர்வான உணர்வைப் பிரதிபலிக்கிறது. இது மிகவும் முற்போக்கானது விசயம்" என்று ஆந்திரப் பிரதேச அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.வி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *