இந்திய ராணுவத்தில் நாகஸ்த்ரா-1 என்ற தற்கொலைப் படை டிரோன்!
- Muthu Kumar
- 15 Jun, 2024
இந்தியா ராணுவத்தில் விரைவில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நாகஸ்த்ரா-1 என்ற தற்கொலைப் படை டிரோன் சேர்க்கப்பட உள்ளது.
உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்தியா ராணுவம் இருந்து வருகிறது. உலக நாடுகளுக்கு இணையான பல அதிநவீன ஆயுதங்களை இந்தியா தனது ராணுவத்தில் சேர்த்து வருகிறது
இதற்கிடையே அடுத்த கட்டமாக இந்திய ராணுவம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் 'ஆத்மநிர்பர்தா' என்பதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த 'ஆத்மநிர்பர்தா' திட்டத்தின் பல திட்டங்களை இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ளது. இதற்கிடையே மிக முக்கிய மைல்கல்லாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலைப் படை டிரோன் ஆயுதமான நாகஸ்த்ரா-1ஐ விரைவில் இந்தியா ராணுவத்தில் சேர்க்க இருக்கிறது. நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த தற்கொலைப் படை டிரோன்களை உருவாக்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த ரகத்தில் சுமார் 480 ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.
இது தொடர்பான இறுதிக் கட்ட ஆய்வு கடந்த மே 20-25 தேதிகளில் நிறைவடைந்த நிலையில்,இந்தியாவின் புல்கானில் உள்ள ராணுவ தளத்திற்கு இப்போது முதற்கட்டமாக 120 டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாகாஸ்ட்ரா-1 டிரோன்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான தாக்குதல்கள் நடத்துகிறது.. இரண்டு மீட்டர்கள் வரை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சிறப்பை இது பெற்றுள்ளது.
9 கிலோ எடையுள்ள இந்த டிரோன்களை ராணுவத்தில் உள்ள வீரரே எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஒரு முறை பறக்கத் தொடங்கினால் சுமார் 30 நிமிடங்கள் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும். மேலும், 15 கிமீ தொலைவில் உள்ள டார்கெட்களையும் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கும் திறன் இதற்கு இருக்கிறது. autonomous மோடில் இதன் திறனை 30 கிமீ வரை நீட்டிக்க முடியும்.
உலகெங்கும் இதுபோன்ற டிரோன்கள் இருக்கிறது என்றாலும் அவற்றை ஒரு முறை மட்டும் பயன்படுத்த முடியும். ஆனால் இந்த நாகஸ்த்ரா-1 டிரோன்களில் பாராசூட் வசதி இருக்கிறது. இதன் மூலம் ஒரு முறை பயன்படுத்திய டிரோன்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இதுவே மற்ற டிரோன்களில் இருந்து இதைத் தனித்துக் காட்டுகிறது.
இந்த நாகஸ்ட்ரா-1வின் மொத்த எடையே 30 கிலோ தான். இதை ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவரால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். நாட்டின் வடக்கு பகுதியில் டிரோன் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்க இந்த நாகஸ்த்ரா-1 ட்ரோன்கள் உதவும் என்றே ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *